தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை., இந்த தேதி முதல் அமல்? அறிவித்த ஹிமாச்சல் அரசு!!!

0

நாடு முழுவதும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சுகு பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக போலீஸீல் 54 ரிப்போர்ட்டர் பணியிட அறிவிப்பு., இந்த தேதி முதல் விண்ணப்பம்? முழு விவரம் உள்ளே…

இதையடுத்து ஹிமாச்சல் மாநிலத்தில் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்ட அறிவிப்பை, நேற்று (மார்ச் 14) அம்மாநில அரசு வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேர் பயனடைய இருந்தாலும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றவர்கள் பயனடைய முடியாது எனவும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால் பெரும்பாலானவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாததால் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here