இனி ரேஷன் கார்டு கட்டாயம்.. இல்லையெனில் ‘இவையெல்லாம்’ கிடைக்காது – அரசின் மாஸ்டர் பிளான்!

0
இனி ரேஷன் கார்டு கட்டாயம்.. இல்லையெனில் 'இவையெல்லாம்' கிடைக்காது - அரசின் மாஸ்டர் பிளான்!
இந்திய குடிமக்களுக்கு ரேஷன் அட்டை என்பது முக்கிய அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. ரேஷன் அட்டையின் வாயிலாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வரும் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரேவந்த்  ரெட்டி தலைமையிலான தெலுங்கானா அரசு மகாலட்சுமி மற்றும் ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ திட்டங்களை ஏற்கனவே மாநிலத்தில் செயல்படுத்த தொடங்கிவிட்டது. இதை தவிர பொது நிர்வாக திட்டத்தின் மூலம் ஆறு முக்கிய உத்திரவாத திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு விட்டது.
இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னதாக தகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே அரசின் திட்டங்கள் கிடைக்கும் என்றும், ரேஷன் கார்டு இல்லாத மக்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் பல மாதங்களாக புதிய ரேஷன் அட்டைகளுக்கான விநியோக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது. எனவே தெலுங்கானா மாநிலத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் தொடங்கப்பட்டு மாநில அரசின் உத்திரவாத திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை., இந்த தேதி முதல் அமல்? அறிவித்த ஹிமாச்சல் அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here