உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் வைப்பு – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!!

0

உருமாறிய கொரோனா வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, கப்பா என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவுக்கு புதிய பேர் வைப்பு:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் ஆண்டின் இறுதியில் உருமாறிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை டெல்டா என அழைக்கப்படும் என்றும். அதே போல இந்தியாவில் கடந்த அக்டோபரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட B.1.617.1 எனும் கொரோனா வகை இனி ‘கப்பா’ (Kappa) வேரியண்ட் என அழைக்கப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய பெயர்கள் க்ரீக் எழுத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா ‘Alpha’ என்றும். அதேபோல தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா ‘Beta’ என்றும் அழைக்கப்படும். மேலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை ‘Gamma’, அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ‘Epsilon’ என அழைக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here