காதல் திருமணம் கைகூட, உங்கள் ஜாதகம் எப்படி அமைந்திருக்க வேண்டும் தெரியுமா..? பார்க்கலாம் வாங்க..!

2

காதல் திருமணம் யாருக்கெல்லாம் அமையும் அதுமட்டுமில்லாமல் என்ன முயற்சி செய்தாலும் யாருக்கெல்லாம் காதல் திருமணம் கை கூடுவது கடினம் என்று தெரியுமா?. மேலும் எந்தெந்த மாதிரியான கிரக அமைப்புகள் உங்கள் காதலுக்கு உறுதுணையாக இருக்கும், எது திருமணத்தில் கொண்டு செல்லும் என்பதை கீழே பார்க்கலாம்.

காதல் அமையும் பாக்கியம்..!

நாம் (மனிதப்பிறவியில்) மட்டும் காதலை அடைய பல தடைகளை சந்திக்க வேண்டி வருகிறது.  சிலர் உண்மையான காதல் கொண்டிருந்தாலும், இருவீட்டார் சம்மதித்தாலும் அவர்களின் காதல் திருமணத்தில் சேரமுடியாமல் தோல்வியில் முடிவதுண்டு.

சிலருக்கு  வாழ்க்கையே காதல் இல்லாமல் முடிந்து விடுவதுண்டு. யாருக்கு காதல் அதிகம் மலரும் என்பதை உங்களின் ஜனன கால ஜாதகத்தின் அடிப்படையில் அதில் இருக்கும் சில கிரக அமைப்புகளை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதக பலன்கள்..!

ஒருவரின் ஜாதகத்தில் அவரின் 5ம் இடம் வலுவாக இருந்தால் காதல் ஏற்படும். அதை தைரியமாக சொல்ல அவரின் மூன்றாம் இடம் சாகதகமாக இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தாலும் 7ம் இடமான மனைவி, குடும்ப ஸ்தானம் சிறாபாக வலுப்பெற்று இருந்தால் தான் அந்த காதல் திருமணத்தில் முடியும் இல்லையெனில் அது எதிர்மாறாக அமைய வாய்ப்புள்ளது.

11ம் இடம் வலுவாக இருக்க காதல் ஆசை நிறைவேறக் கூடும். பரணி, பூராடம், ஆயில்யம் ஆகிய நட்சத்திர சாரத்தில் லக்கினங்கள் அமைந்திருந்தால், அவர்களுக்கு காதல் உணர்வு வெளிப்படும்.

காதல் திருமண அமைப்பு எப்படி இருக்கும்?

உங்கள் ஜாதகத்தில் உள்ள 5ம் வீட்டு அதிபதி உங்கள் ஜாதகத்தில் 7ம் இடத்தில் இருந்தாலோ, 7ம் வீட்டு அதிபதி உங்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தில் இருந்தாலோ, அல்லது இருவரும் சேர்ந்து 7ம் வீட்டில் இருப்பதாலும் காதல் அமைப்பு இருக்கும் பாக்கியம் உண்டு.

ரிஷப ராசிக்கு 5ம் வீட்டு அதிபதியான புதன் 8ம் வீடான விருச்சிகத்தில் இருந்தால், ரிஷபத்திற்கு 7ம் அதிபதியான செவ்வாய் கன்னியில் அமர்ந்திருக்க வேண்டும் அல்லது புதன் உங்கள் லக்கினத்திற்கு 3ம் வீட்டு அதிபதியும் ஒன்றாக சேர்ந்து உங்களின் 7ம் அதிபதி வீட்டில் அல்லது நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

கும்ப லக்கினம்..!

கும்ப லக்கினம் சூரியன் மிதுனத்தில் அமர்ந்து புதனும் சனியும் 11ஆம் வீட்டில் இருந்து பார்த்தாலோ காதல் திருமணம் நடக்கும் அல்லது கும்ப லக்கினம் புதன் செவ்வாய் ஒன்று சேர்ந்து அவர்களை சுக்கிரன் பார்த்தாலோ அல்லது கும்ப லக்கினம் புதன் சிம்மத்தில் பூரம் நட்சத்திர சாரத்தில் நின்றாலோ காதல் கைகூடிவர வாய்ப்புள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here