மதுரையில் டைடல் பார்க்., 10000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு., முதற்கட்ட பணி எப்போது? ஆணையர் அறிக்கை!!

0
மதுரையில் டைடல் பார்க்., 10000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு., முதற்கட்ட பணி எப்போது? ஆணையர் அறிக்கை!!
மதுரையில் டைடல் பார்க்., 10000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு., முதற்கட்ட பணி எப்போது? ஆணையர் அறிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் அதிக ஐடி கம்பெனிகள் இயங்கி வருகிறது. இதை தொடர்ந்து மதுரையில் 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதன் மூலம் 10000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இந்த டைடல் பார்க் அமைக்கும் கட்டமைப்பு பணிக்கு 600 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது முதல் கட்டமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகில் 5 ஏக்கரில் டைடில் பார்க் அமையவுள்ளதாம். அதன்படி இப்பணிகளில் 51% மதுரை மாநகராட்சியும், 49% தனியார் துறையும் பங்கேற்கும் என தெரிவித்துள்ளார். இந்த பணிகளுக்காக தமிழகத்தின் எல்காட் அதிகாரிகள் ஆய்வறிக்கை வழங்கியுள்ளனர். இதையடுத்து நிலத்தை பிளாட்களாக பிரிப்பது போன்ற கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களே…, தீபாவளி பரிசு வாங்க ரெடியா இருக்கீங்களா?? வெளியான மாஸ் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here