வாட்ஸ்ஆப்பில் புதிய கட்டுப்பாடுகள் – வதந்தி பரவலைக் குறைக்க நடவடிக்கை..!

0

வாட்ஸ்அப்ல்  வதந்திகள்  தவறான தகவல்களை மற்றும் தேவையில்லாத வதந்திகள் தவிர்க்கும் எண்ணத்தில் வாட்ஸ்அப் குழுமம் மெசேஜின் பார்வேர்ட் மீதான வரம்பைக் குறைக்க போவதாகா அறிவித்துள்ளது.

வதந்திகள் பரவல்:

கொரோனா தொற்று குறித்து சமூகவலைதளங்களில் அவ்வப்போது தவறான வதந்திகள் பரவி வருகிறது  வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த தற்போது வாட்ஸ்அப்பில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்ஆப்பில்   ஒரு நேரத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தகவல்  மெசேஜை அனுப்ப முடியும் என அறிவித்துள்ளது. முன்னதக ஒரே நேரத்தில் ஐந்து நபருக்கு பார்வேட் மெசேஜை அனுப்ப முடியும்..

இந்த புதிய கட்டுப்பாடு, உலகம் முழுவதும் மக்களை பாதிக்கும் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் வதந்திகள் போது தவறான தகவல்களை பரப்புவதை  குறைக்க  உதவும் என்று கூறப்படுகிறது.

உண்மைத்தன்மையை சரி பார்க்க..!

இந்த புதிய சிறப்பு, வாட்ஸ்அப் வழியாக பலமுறை அனுப்பப்பட்ட, ஒரு குறிப்பிட்ட பார்வேட் மெசேஜிற்கு அருகில் பூதக்கண்ணாடி (லென்ஸ்) வடிவிலான ஒரு பட்டனை காட்சிப்படுத்தும். அந்த லென்ஸ் பொத்தானின் வழியாக குறிப்பிட்ட பார்வேட் மெசேஜின் உண்மைத்தன்மையை, அதாவது அது உண்மையான தகவல் தானா? அல்லது போலியான தகவலா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்

வாட்ஸ்அப்இன்போபீட்டா வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின் வழியாக இது முதலில் ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களை வந்த சேரும் மற்றும் தற்போது வரையிலாக இது சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here