வாட்ஸ் அப் பயனர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – இதுவரை இல்லாத புதிய வசதி அறிமுகம்! மெட்டா நிர்வாகம் அதிரடி!!

0
வாட்ஸ் அப் பயனர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் - இதுவரை இல்லாத புதிய வசதி அறிமுகம்! மெட்டா நிர்வாகம் அதிரடி!!
வாட்ஸ் அப் பயனர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் - இதுவரை இல்லாத புதிய வசதி அறிமுகம்! மெட்டா நிர்வாகம் அதிரடி!!

உலகெங்கும் உள்ள அதிக மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் தளத்தில், இதுவரை இல்லாத புதிய வசதியை தீபாவளி சர்ப்ரைஸாக மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி சர்ப்ரைஸ்:

உலகெங்கும் உள்ள அதிக மக்கள் பயன்படுத்தும், சமூக வலைதள ஆப்புகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த ஆப்பை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம், தங்கள் பயனர்களுக்கு சமீப காலமாக புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், குறுந்தகவலை அழிக்கும் கால நேரம் நீட்டிப்பு, ஸ்டேட்டஸ் வெளியிடுவதில் தனியுரிமை, அதிக ஜிபி அளவுள்ள கோப்புகளை பகிர்தல் உள்ளிட்ட பல கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் தற்போது, மெட்டா நிறுவனம் தங்கள் வாட்ஸ் அப் பயனர்களுக்கு இதுவரை இல்லாத புதிய அப்டேட் ஒன்றை வழங்க முடிவெடுத்துள்ளது. இதுவரை பேஸ்புக் ஆப்பில் இருந்து வந்த அவதார் எமோஞ்சி ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த அப்டேட்டை பயன்படுத்தி பயனர்கள் தங்கள் சுய விவர புகைப்படத்தை, டிஜிட்டல் தளத்திற்கு மாற்றலாம்.

T20WC IND vs PAK.., இந்திய அணி பவுலிங் தேர்வு..! வலையில் சிக்குமா பாகிஸ்தான்.., வெற்றியின் முடிவு யார் கையில்??

இதனால் வீடியோ காலின் போது கூட நீங்கள் இந்த அவதார், ஸ்டிக்கரை ப்ரொபைலாக பெறலாம். முதற்கட்டமாக இந்த அப்டேட் 2.22.23.8 மற்றும் 2.22.23.9 உள்ளிட்ட ஆண்ட்ராய்டு வாசிகளுக்கு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தொடர்ந்து இவை அடுத்தடுத்த, செல்போன் பயனர்களுக்கு பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது. தீபாவளி சர்ப்ரைஸாக whatsapp பயனர்களுக்கு அறிமுகமாகியுள்ள இந்த அவதார் எமோஜி ஸ்டிக்கர் பலரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here