வாட்ஸ் அப் பயன்படுத்துவது தனிப்பட்ட விருப்பம், கட்டாயம் இல்லை – டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து!!

0

வாட்ஸ் அப் செயலியில் வந்த புதிய அப்டேட் பாதுகாப்பானவை அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்குக்கு இன்று நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பதிவிறக்கம் கட்டாயம் இல்லை

கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இந்த பாலிசியை பயனாளர்கள் வரும் பெப்ரவரி மாதத்துக்குள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருந்தது. அதனால் அதிருப்திக்குள்ளான வாட்ஸ் அப் பயனாளர்கள் பெரும்பாலானோர் தங்களது வாட்ஸ் அப் சேவைகளை அதனுடன் முடித்துக்கொண்டனர்.

இன்ஸ்டாவில் மீண்டும் கவர்ச்சி வேட்டையை துவங்கிய ஷிவானி – ரசிகர்கள் உற்சாகம்!!

வாட்ஸ் ஆப்பில் வெளிவந்த புதிய அப்டேட்டுகள் நாட்டிற்கும், நாடு மக்களுக்கும் பாதுகாப்பானது அல்ல என்றும் அந்த செயலியை தடை செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது ‘ வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவது கட்டாயம் அல்ல. வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவது அவரவர் விருப்பம். இதை எல்லாரும் உணர வேண்டும். மற்ற எல்லா செயலிகளுக்கும் அதை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளும், விதிமுறைகளும் இருக்கின்றன. பின்பு வாட்ஸ் அப்புக்கு எதிராக வழக்கு தொடுத்தது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியது. மேலும் இந்த கருத்துக்கு வாட்ஸ் ஆப் நிறுவனத்திடமிருந்து விளக்கம் பெற்று தர மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here