தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி – மகிழ்ச்சி வெள்ளத்தில் நகைப்பிரியர்கள்!!

0

கடந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இடையில் சற்று அதிகரித்தாலும் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. இதனால் நகை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம்:

தற்போது இந்த மாதம் முழுவதும் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மக்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் அதற்காக தங்கம் வாங்குவதற்கு தக்க காலத்தை எதிர்நோக்கி காத்து வருகின்றனர். காரணம் தங்கத்தின் விலை ஓர் நிலைபாட்டிலையே இல்லை. திடிரென்று உயர்கிறது, திடிரென்று அதிரடியாக வீழ்ச்சியை சந்திக்கிறது. இதனால் மக்கள் குழப்பம் அடைந்து வந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. எனவே தற்போது மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் நகை வாங்குவதற்கு இதுவே சரியான காலம் என்றே கூறலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்ஸ்டாவில் மீண்டும் கவர்ச்சி வேட்டையை துவங்கிய ஷிவானி – ரசிகர்கள் உற்சாகம்!!

தற்போது சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. எனவே தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் சென்னையில் ரூ. 37,088 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத்தங்கம் 1 கிராம் ரூ. 4,636 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் தற்போது 1 கிராம் வெள்ளி ரூ.71.30ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here