ரசிகர்கள் மீது போலீசார் தடியடி.., IND VS AUS  போட்டியில் ஏற்பட்ட சோகம்.., வைரல் வீடியோ இதோ !!

0
ரசிகர்கள் மீது போலீசார் தடியடி.., IND VS AUS  போட்டியில் ஏற்பட்ட சோகம்.., வைரல் வீடியோ இதோ !!
ரசிகர்கள் மீது போலீசார் தடியடி.., IND VS AUS  போட்டியில் ஏற்பட்ட சோகம்.., வைரல் வீடியோ இதோ !!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது போலீசார்கள் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி T20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு T20 போட்டி நடைபெற உள்ளது. இதனால் இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இந்த 3 வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் டிக்கெட்டை வாங்குவதற்காக இன்று அதிகாலை மூன்று மணிக்கே ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகி கொண்டே போனது. இதனால் அங்கு வந்த  போலீசார்கள் கூட்டத்தை கலைப்பதற்காக ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

யாரும் எதிர்பாராத விதமாக போலீசார்கள் தடியடி நடத்தியது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓடினர். மேலும் BCCI முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் டிக்கெட் விற்பனை தொடங்கியதே இந்த சர்ச்சைக்கு காரணம் என குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here