T20 உலக கோப்பை 2024: தொடர்ந்து சொதப்பும் விராட் கோலி.. அதிகரிக்கும் விமர்சனம்!!

0
T20 உலக கோப்பை 2024: தொடர்ந்து சொதப்பும் விராட் கோலி.. அதிகரிக்கும் விமர்சனம்!!
ICC T20 உலக கோப்பை 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 2 போட்டிகளில் விளையாடி அதில் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. என்னதான் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த முக்கிய வீரர் விராட் கோலி 3 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 4 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் விராட் கோலி ஆடிய கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ந்து சொதப்பி உள்ளார். இதனால் விராட் ஐபிஎல் தொடரில் மட்டுமே சிறப்பாக ஆடுவார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவர் தொடர்ந்து முக்கிய போட்டிகளில் சொதப்பி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே எதிர்வரும் போட்டிகளில் அவர் சொதப்பும் பட்சத்தில், அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை களம் இறக்க  வேண்டும் என்று விமர்சனங்கள் எழுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here