டெல்லி மைதானத்தில் விராட் கோலி படைத்த மாபெரும் சாதனை…, அப்போ 2nd டெஸ்டில் அசத்துவாரா??

0

இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியை டெல்லி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த மைதானம் விராட் கோலியின் ரன் வேட்டைக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி:

இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இந்த தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால், ஆரம்பம் முதலே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, நாக்பூரில் நடந்த முதல் போட்டியை சுழற்பந்து வீச்சாளர்களின் அதிரடியால் இந்திய அணி வென்றது. இதனை தொடர்ந்து, வரும் 17ம் தேதி 2 வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில், இந்திய அணி கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

ஸ்டீவ் ஸ்மித்தின் செயலுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கண்டனம்…, அப்படி என்ன செய்தார் தெரியுமா??

இதில், இந்தியாவின் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 55 ரன்களும் எடுத்து சாதனை படைத்திருந்தார். இவரது இந்த அதிரடி ஆட்டம், எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டிலும் தொடர்ந்தால், நீண்ட நாள் டெஸ்ட் போட்டிக்கான சதம் ஏக்கம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பார்முக்கு திரும்பி உள்ள இவர், டெஸ்ட் போட்டியிலும் கம்பேக் தருவாரா? என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here