ஸ்டீவ் ஸ்மித்தின் செயலுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கண்டனம்…, அப்படி என்ன செய்தார் தெரியுமா??

0
ஸ்டீவ் ஸ்மித்தின் செயலுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கண்டனம்..., அப்படி என்ன செய்தார் தெரியுமா??
ஸ்டீவ் ஸ்மித்தின் செயலுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கண்டனம்..., அப்படி என்ன செய்தார் தெரியுமா??

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் செயலை கண்டித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆலன் பார்டர் எச்சரித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்:

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்திருப்பது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நடந்து முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 37, 25* என மற்ற வீரர்களை விட சிறப்பாக விளையாடி இருந்தார். இவர் போட்டியின் போது, சிறப்பான பந்து வீச்சாளர்களை பார்த்து, தனது கட்டை விரலை உயர்த்தி வாழ்த்து தெரிவிக்கும் பழக்கம் கொண்டவர். இவரது, இந்த செயலை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் செய்தார்.

பிரபல அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட்…, 5வது முறையாக கோப்பையை தட்டி தூக்கி அசத்தல்!!

இதனை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் எச்சரித்துள்ளார். அதாவது, தான் ரன்களை அடிக்க முடியாத அளவுக்கு, எதிரணியினர் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இவர்களை பார்த்து, வாழ்த்து தெரிவிப்பது என்ன முட்டாள் தனமான பழக்கம் என்று சாடி உள்ளார். இதனை தொடர்ந்து, முதல் டெஸ்ட்டில் அடைந்த தோல்வியில், கற்ற பாடத்தை எடுத்துக் கொண்டு, 2வது டெஸ்டில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here