இடிச்சு அரைச்சு போட்ட காரசாரமான மட்டன் குருமா.., ஒரு தடவை செஞ்சு பாருங்க சுவை அள்ளும்!!

0
இடிச்சு அரைச்சு போட்ட காரசாரமான மட்டன் குருமா.., ஒரு தடவை செஞ்சு பாருங்க சுவை அள்ளும்!!
இடிச்சு அரைச்சு போட்ட காரசாரமான மட்டன் குருமா.., ஒரு தடவை செஞ்சு பாருங்க சுவை அள்ளும்!!

எப்பவும் ஒரே மாதிரி மட்டன் ரெசிபியை சமைக்காமல் கொஞ்சம் டிஃபரண்டா மசாலா அரைச்சு ஊத்திய மட்டன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

1. மட்டன் – 1/2 கிலோ

2. பெரிய வெங்காயம் -2

3.தக்காளி – 2

4. பட்டை கிராம்பு ஏலக்காய் – சிறிதளவு

5. மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்

6. மிளகாய் தூள் – டீஸ்பூன்

7.மல்லி தூள் – டீஸ்பூன்

8.தேங்காய் – 1 கப்

9.கசகசா – 1 டீஸ்பூன்

10.கடலைப்பருப்பு – டீஸ்பூன்

11.முந்திரி- 5

12.இஞ்சி பூண்டு பேஸ்ட் – டீஸ்பூன்

13. எண்ணெய் – 5 டீஸ்பூன்

செய்முறை முறை விளக்கம்:

இந்த மட்டன் குருமா செய்வதற்கு நாம் சமைக்க எடுத்து வைத்துள்ள மட்டனை நன்றாக சுத்தம் பண்ணி ஒரு குக்கரில் போட்டு 5 விசில் வைத்து மட்டனை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு சேர்த்து அத்துடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அதில் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கி விடவும்.

பிறகு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகளையும், முந்திரிப் பருப்பு மற்றும் கசகசா சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து அதை மட்டன் குருமாவில் சேர்த்து நன்றாக வதக்கி விடவும். பிறகு கடாயை ஒரு மூடி போட்டு மூடி விடவும். பிறகு 10 நிமிடம் கழித்து மட்டன் குருமாவில், கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும். இப்போ நமக்கு சுவையான மட்டன் குருமா ரெடியாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here