விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…!போஸ்ட்டரே செம மிரட்டலா இருக்குது!!!

0

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கமல் அவர்களின் விக்ரம் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் இந்த போஸ்டர் செம மிரட்டலாக வெளிவந்து உள்ளது. மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தை இயங்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

உலக நாயகன் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பை கொண்டது தான். அந்த வரிசையில் மிகுந்த  எதிர்பார்ப்பை கிளப்பிய படம் விக்ரம் படம் ஆகும். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். களம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் தளபதியின் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் இயக்கவுள்ளார்.

தற்போது அந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி, கமல்,ஃபஹத் பாசில் போன்ற செம மிரட்டலான தோற்றத்தில் உள்ளனர். மேலும் இந்த படத்தில் இவர்களுடன் சேர்ந்து அர்ஜுன் தாஸ், நரேன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார்.

இந்த படம்   இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கபட்ட நிலையில் கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. மேலும் இது அரசியல் மற்றும் திரில்லர் கதையாக உருவாக உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here