குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்பைஸி உருளைக்கிழங்கு ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க

0

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றாலே கொள்ளை பிரியம். அதில் எந்த வகையில் சமைத்து தந்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் முற்றிலும் வித்தியாசமான முறையில் ஸ்பைஸி உருளைக்கிழங்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1/4 கி

சோளமாவு – 2 தேக்கரண்டி

வரமிளகாய் – 3

இஞ்சி – சிறிது

அரைத்த மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி

வெங்காயம் – சிறிது

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் உருளை கிழங்கை நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது அதனை தண்ணீரில் வேகவைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது தண்ணீர் எதுவும் இல்லாமல் எடுத்து அதில் சிறிது உப்பு மற்றும் சோளமாவை சேர்த்து கலந்து அதனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

இப்பொழுது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். இப்பொழுது அரைத்து வைத்த மிளகாய் விழுதை சேர்க்கவும். நன்கு வதங்குவதும் சிறிது உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், சோயா சாஸ் சேர்த்து அங்கு கிளறி விடவும்.

நன்கு சுருண்டு கிரேவி பதத்திற்கு வந்ததும் அதில் பொறித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். நன்கு வதங்கியதும் இறக்கி பரிமாறினால் சுவையான ஸ்பைஸி உருளைக்கிழங்கு ரெசிபி தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here