குளு..குளு மழைச்சாரலின் குதூகலிப்பில் பாரதி கண்ணம்மா அருண் – கையில் இருக்கும் அந்த பொருளை தூக்கி போடுங்க நண்பா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குடைக்குள் அருண்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் பாரதி கண்ணம்மா.   இந்த தொடரில் மருத்துவராக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண்.  இந்த தொடர் வாயிலாக பல ரசிகர்களின் கனவு நாயகனாக அவர் மாறியுள்ளார்.  இந்த சீரியலில் பாரதி-கண்ணம்மா ஜோடி என்றாலே சின்னத்திரையில் தனி மவுசு தான்.

அந்தளவுக்கு தனது எளிமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து ஈர்த்துள்ளார்.  இந்த நிலையில், அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு குடையை பிடித்தபடி கொட்டும் மழையில் நனைந்தபடி அவர் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here