பாப் கட் ஹேர்ஸ்டைலில் 10 வயது குறைந்த லாஸ்லியா.. இணையத்தை கலக்கும் இன்ஸ்டா பதிவு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த லாஸ்லியா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நோ மேக்கப் லுக் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனை ஐந்தாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் இலங்கை பெண்ணான லாஸ்லியா. பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் தாக்குப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் கவினுடன் இவர் காதல் செய்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியேறியதும் அது பற்றி துளியும் கண்டுகொள்ளவில்லை லாஸ்லியா. சமீபத்தில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து, பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது, அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பாப் கட் ஹேர்ஸ்டைலில் தான் எடுத்துக் கொண்ட நோ மேக்கப் லுக் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்க இயற்கை அழகு ஆளை கொள்ளுதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here