என்னடா சொன்னீங்க.. என் சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா – ஆதாரத்தை காட்டி வாயடைத்த விஜய்!!!

0
என்னடா சொன்னீங்க.. என் சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா - ஆதாரத்தை காட்டி வாயடைத்த விஜய்!!!

சென்னை நீலாங்கரையில் உள்ள பள்ளி ஒன்றிற்கு வாக்களிக்க விஜய் சிவப்பு நிற காரில் சென்றிருந்த நிலையில் அந்த காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என பலரும் வறுத்தெடுத்தனர். தற்போது விஜய் இன்சூரன்ஸ் ஆதாரங்கள் அனைத்தையும் காட்டி இந்த விவகாரத்தில் இருந்து தப்பி உள்ளார்.

விஜய் காருக்கு இன்சூரன்ஸ்:

கடந்த சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தார். போன வருட தேர்தலுக்கு விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்த நிலையில் இந்தாண்டு சிவப்பு நிற சாண்ட்ரோ காரில் சென்றிருந்தார்.

விஜய் வாக்களிக்க வந்தபோது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். வாக்களித்துவிட்டு சென்ற பிறகு விஜய் காரில் வந்தது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்பு விஜய் வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் தேதி முடிவடைந்து விட்டது என பலரும் பலவிதமாக செய்தியை பரப்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் விஜய்யின் தரப்பில் இருந்து இந்த விவாகரத்துக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

கடைசியில் வனிதாவையே கதற வைத்த ஹவுஸ்மேட்ஸ் – பிக் பாஸ் அல்டிமேட் அப்டேட்!!

அதாவது விஜய் வந்த Maruti /Celerio ZXI மாடல் காருக்கு, Own Damage இன்சூரன்ஸ் ஜூன் 16 2021 முதல் ஜூன் 15 2022 வரை உள்ளதாகவும், Third party insurance 2019 மே 29 முதல் 2022 மே 28 வரை உள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் ஜோசப் விஜய் என்கிற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here