விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்யும் விஜய் பட நடிகர் – லண்டனில் நடக்கும் கோலாகல ஏற்பாடுகள்!!

0

விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட துப்பாக்கி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் வித்யுத் ஜம்வால், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லன் நடிகர் திருமணம்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிய சூப்பர் ஹிட் திரைப்படம் துப்பாக்கி. நடிகர் விஜய் கேரியரில் முக்கியமாக அமைந்த படங்களில் இதுதான் முதன்மையானது. அந்த வகையில், இந்த படம் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் வித்யுத் ஜம்வால்.

இந்தப் படத்திற்குப் பிறகு இவர், அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு தோழனாக நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து, இவருக்கென்று கோலிவுட்டில் தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவருக்கு கடந்த ஆண்டு நந்திதா மஹ்தானி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பேஷன் டிசைனிங்கில் ஜொலித்து வந்த நந்திதா ஏற்கனவே விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் இருவரும், லண்டனில் அடுத்த மாதம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நந்திதாவை மறுமணம் செய்ய உள்ள வித்யுத் என்பவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here