எதிர் நீச்சல் சீரியலில் டைரக்டர் வச்ச செக்.., என்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகை., அதுவும் வில்லியாகவா??

0
எதிர் நீச்சல் சீரியலில் டைரக்டர் வச்ச செக்.., என்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகை., அதுவும் வில்லியாகவா??
எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாள் குணசேகரன் தான் ஜனனிக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருந்தார். ஆனால் இப்போது ஜனனி அப்பாவின் அண்ணன் மகனான கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகிய இருவரும் ஜனனிக்கு புதிய வில்லனாக வந்துள்ளனர். மேலும் இவர்கள் தன் அப்பாவின் அண்ணன் மகன்கள் தான் என்ற விஷயம் இப்போது வரை ஜனனிக்கு தெரியவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்து கதை எந்த நோக்கில் நகரப் போகிறது என்பது தெரியவில்லை. இப்படி இருக்கையில் ஜனனி தான் ஆரம்பித்த கம்பெனியை தொடங்கலாம் என அங்கு செல்கிறார்.
ஆனால் அவர்களுக்கு முன்னதாகவே ராமசாமி, கிருஷ்ணசாமி தங்களது குடும்பத்துடன் வந்து பூஜை செய்கின்றனர். இதை பார்த்து அதிர்ச்சியான ஜனனி உங்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது என  சண்டை போடுகிறார். அந்த நேரத்தில் டி கே கலா ஜனனியின் அப்பத்தாவாக அறிமுகமாகிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே பல படங்களில் வில்லியாக நடித்துள்ள நிலையில் நிச்சயம் இந்த சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்திற்காக தான் என்ட்ரி கொடுத்திருப்பார் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here