தமிழக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் புதிய மாற்றம்…, பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
தமிழக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் புதிய மாற்றம்..., பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர், பதவி உயர்வு பெறுவது தொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது, பொதுவாக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பதில் மாநில மற்றும் ஒன்றிய அரசின் பள்ளிக் கல்வித் துறையை முடிவெடுக்கும். இதில், குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முன்னுரிமை, தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் முன்னுரிமை என  பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது.
இதனால், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கிடைக்கப் பெரும் ஊதியத்தில் முரண்பாடு அதிக அளவில் இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 19 ஆண்டுகளாக, தொடக்க நிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் மாநில முன்னிலை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளனர். சமீபத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கிற்கு, தொடக்கம் மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் இனி மாநில முன்னுரிமையே வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here