மும்பை சிறையில் அடைக்கப்பட்டாரா விஜய் மல்லையா..? நாடு கடத்தப்பட்ட செய்தியின் உண்மைத்தன்மை என்ன..?

0

இந்திய வங்கிகளிடம் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்த உண்மைத்தன்மை தற்போது வெளியாகிஉள்ளது .

விஜய் மல்லையா:

இந்தியாவில் உள்ள 17 வங்கிகளிடம் 9,691 கோடி ரூபாய் கடன் பெற்று முறையாக செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் தஞ்சம் அடைந்த விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. 64 வயதான விஜய் மல்லையாவின் மோசடி வழக்கை சிபிஐ அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. லண்டலில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு விட்டதாகவும், ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த செய்திகள் உண்மையில்லை என தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 64 வயதுள்ள யாரும் இந்தியாவிற்கு நேற்று நாடு கடத்தப்படவில்லை என தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே இந்திய சிறையில் அடைக்கப்பட்டால் தனது உயிர்க்கு ஆபத்து இருப்பதாக விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் அவர் அடைக்கப்படவுள்ள சிறையின் விபரங்களை அளிக்க சிபிஐக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ சிறையின் பாதுகாப்பு, வசதிகள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பித்து உள்ளது. இதனால் விரைவில் நாடு கடத்தப்படுவார் என கூறப்பட்டு உள்ளது. ஆனால் மறுபுறம் கொரோனா பாதிப்பு காரணமாக விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பணிகள் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here