தளபதி 66 ஷூட்டிங் குறித்து விஜய் போட்ட அதிரடி கண்டிஷன் – நடிகரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

0
தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதான் - சூசகமாக அறிவித்த படக்குழு! கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!!
தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதான் - சூசகமாக அறிவித்த படக்குழு! கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!!

தளபதி 66 படத்தின் ஷூட்டிங், சென்னையில் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் பெப்சி திரை ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் விஜய் கண்டிஷன் போட்டுள்ளார்.

விஜய் போட்ட கண்டிஷன்:

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தளபதி 66 என்ற தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தளபதி 66 ஷூட்டிங் தமிழ்நாட்டிலேயே இல்லையாம் - இணையத்தில் வெளியான கொலமாஸ் அப்டேட்!!

இதனை கேள்விப்பட்ட விஜய், படத்தின் ஷூட்டிங் கண்டிப்பாக சென்னையில் நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் பெப்சி திரை ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் பேசியுள்ளார். இது குறித்த தகவலை அறிந்த, ரசிகர்கள் மற்றும் பெப்சி ஊழியர்கள் விஜய்க்கு மனதார நன்றி தெரிவித்துள்ளனர். இதுபோக, இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் வம்சி, இது அரசியல் படம் இல்லை என்றும், வழக்கமான எமோஷனல் படம்தான் என்றும் விளக்கமளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here