டைட்டானிக் ரோஸாக உருமாறிய வத்திக்குச்சி வனிதா – கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா தற்போது டைட்டானிக் ரோஸ் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் வனிதா

விஜய் குமாரின் மகளாகிய வனிதா தொடர்ந்து தனது திருமண பந்தத்தின் மூலம் தான் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவரது அடாவடிய பேச்சும் திமிரும் தான் அனைவரையும் வெறுக்க வைக்கிறது. இவர் செய்த சில காரியங்களால் தான் குடும்பத்தில் யாரும் இவரை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

சமூக வலைத்தளம் வனிதாவின் டாபிக்கை வைத்து தான் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விஜயகுமார் குடும்பமோ தனக்கும் எதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல உள்ளது.

எங்கு சென்றாலும் அங்கு ஒரு பிரச்னையை இழுத்து கொண்டு வருவது தான் வனிதாவின் வழக்கமே. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கூட நடுவர்களை எதிர்த்து அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார். தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அதில் ஒன்று தான் ‘பிக்கப் ட்ராப்’ இதில் பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறார் வனிதா. இருவருக்கும் திருமணம் ஆவது போல புகைப்படம் வெளியாக வனிதாவின் 4வது திருமணம் என்ற செய்தி இணையத்தில் உலா வந்தது. அதற்கு பதிலடியும் கொடுத்தார் வனிதா.

என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து விட்டு முடங்கி விடாமல் தன் வேலை உண்டு என்றே இருப்பார். அந்த வகையில் தற்போது இத்தனை பிரச்சனைகள் வந்து ஓய்ந்தும் புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் டைட்டானிக் பட நாயகியான ரோஸ் பாணியில் போட்டோஷூட் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here