நீ என்ன பண்ணுனாலும் எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க… காதல் தோல்வியில் கதறும் பாக்கியலட்சுமி நடிகை!!!

0

சின்னத்திரை  சீரியல் நடிகைகள் இல்லத்தரசிகளை மட்டுமல்லாமல் இளசுகளையும் கவர்ந்து வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேஷ். தற்போது இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உள்ள வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

திவ்யா கணேஷ் தனது வாழ்க்கை பயணத்தை ஒரு தொகுப்பாளினியாக தொடங்கினார். அதன் பிறகு சன் டிவி சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக தன்னை மாற்றிக் கொண்டார். அதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

அதாவது ஒற்றை பிள்ளையாக வளர்ந்த ஜெனி கூட்டுக்குடும்ப அன்பிற்காக ஏங்குகிறார். இந்நிலையில் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் வேறு ஒரு மதத்தை சேர்ந்த பாக்கியாவின் மூத்த மகன்  செழியனை காதலித்து பல பிரச்சனைகளை கடந்து திருமணம் செய்து கொள்கிறார். அங்கு மெல்ல மெல்ல அனைவருக்கும் பிடித்த மருமகளாக மாறுகிறார்.

இவ்வாறு அந்த சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது  அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷா பேசும்,’காதல் தோல்வியில் தான் முடியும்…நீ என்ன பண்ணுனாலும் எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க…’ என்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து  உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here