யூடூயுப்பை கலக்கும் வலிமை மோஷன் போஸ்டர் – படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!!!

0

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. மிகவும் எதிர்பாக்கப்பட்ட இதன் மோஷன் போஸ்டர் ஜூலை 11 ஆம் தேதி வெளியானது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் யூடூயுப்பில் மிக குறுகிய காலத்தில் 1 கோடி பார்வைகளை கடந்து உள்ளது. மேலும் படக்குழு வலிமை படத்தின் புதிய போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது.

தல அஜித்தின் 60 வது படமான வலிமையை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அப்டேட்டுக்காக தல ரசிகர்கள் கிட்டத்தட்ட 1 வருடமாக காத்து கிடந்தனர். ஆனால் அஜித் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாக வேண்டிய அப்டேட் வெளிவராமல் தாமதமாகியது.

அஜித் ரசிகர்களும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் யூரோ கால்பந்து போட்டி வரை வலிமை அப்டேட் கேட்டு தெறிக்கவிட்டனர். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு ஜூலை 11 ஆம் தேதி வெளியிட்டது. அந்த மோஷன் போஸ்ர் குறுகிய காலத்தில் யூடூயுப்பில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை அறிவித்த படக்குழு அஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டது. அது தல ரசிகர்களால் படு வேகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

வலிமை நியூ போஸ்டர்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here