கொரோனா நிலவரம்: உலக அளவில் பலி எண்ணிக்கை 41 லட்சத்தை நெருங்கும் அபாயம்!!!

0
ஆத்தி, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே - 80க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று!!!
ஆத்தி, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே - 80க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று!!!

கொரோனா தொற்றால் தற்போது வரை உலகம் முழுவதும் 18.85 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40.65 லட்சம் ஆக பதிவாகியுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வருகிறது. அதும் குறிப்பாக இதன் பரவல் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அலை அலையாக ஏற்படுகிறது. தற்போது இந்த கொரோனா பரவலின் இரண்டாம் அலை உலகை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு உறுமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த கொடிய நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. அதே போல் இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசிலும் உள்ளது. கொரோனா தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் செய்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது வரை உலக அளவில் 188,578,954 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,065,325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 172,406,263 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here