தமிழகத்தில் யு.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்புகள்.., முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழகத்தில் யு.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்புகள்.., முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் யு.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்புகள்.., முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 26 விதமான உயர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக யு.பி.எஸ்.சி என்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்றது. இந்த தேர்வில், முதல்நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என 3 நிலைகள் உள்ளன. இதில், முதல் 2 நிலைகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் தொடக்கம் வரை நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று (மே 23) வெளியானதையடுத்து, இதில் 933 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவிலான இந்த தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 42 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஜீ ஜீ மாநில அளவில் முதலிடத்திலும், தேசிய அளவில் 107வது இடத்தையும் பிடித்து சாதனைப்படைத்துள்ளார். இவருக்கு மாநில முழுவதும் உள்ள கல்வியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இவரை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்?? வெளியான முக்கிய தகவல்!!

இவர் வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த ஜீ ஜீக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் என பதிவிட்டுள்ளார். மேலும், கடந்த ஆண்டை விட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமைப் (சிவில் சர்வீசஸ்) பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சி செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து, அடுத்து வரும் UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அதனைப் பயன்படுத்தி கொண்டு வெற்றி பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here