
தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என ஆல் ஏரியாவிலும் கில்லியாக விளங்கி வருபவர் தான் சிலம்பரசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது உலகநாயகன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி படு பிரமாண்டமாக உருவாக இருக்கும் சிம்பு 48 படத்தில் நடிக்க இருக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படம் வரலாற்று ஜானரில் உருவாக இருப்பதால் படத்தோட எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இப்படத்துக்காக சிம்பு தாய்லாந்தில் சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருகிறார். அது போக இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிம்பு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன்னர் மன்மதன், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் டபுள் ஆக்சனில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது