பிரசவத்தில் நிகழ்ந்த புதுமை.,7 நிமிடத்தில் மீண்டும் உயிர் பிழைத்த குழந்தை – மருத்துவர் சாதனை!!

0
பிரசவத்தில் நிகழ்ந்த புதுமை.,7 நிமிடத்தில் மீண்டும் உயிர் பிழைத்த குழந்தை – மருத்துவர் சாதனை!!

மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை, அசைவற்று கிடந்த நிலையில் மருத்துவரின் 7 நிமிட போராட்டத்தில் குழந்தை மீது உயிர் பிழைத்தது.

குழந்தைக்கு மறு ஜென்மம் :

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள, ஆக்ரா நகரில் உள்ள மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்ததிலிருந்து எந்த அசைவும் இல்லாமல் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து பிரபல குழந்தைகள் நல மருத்துவர் சுலேகா சௌத்திரி அதிரடியாக குழந்தையை சுயநினைவு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார். குழந்தையின் வாயோடு வாய் வைத்து ஊதி, குழந்தையை குப்புற படுக்க வைத்து முதுகை தட்டி முதலுதவி செய்தார். இந்த 7 நிமிட போராட்டத்திற்கு பின், குழந்தை கண் திறந்து பார்த்தது.

ஓடிடியில் களமிறங்கும் டாப்  ஹிட்  திரைப்படங்கள்.., அதிகாரபூர்வமாக வெளியான முழு லிஸ்ட் இதோ!!

மருத்துவர்கள், தக்க சமயத்தில் செய்யும் உதவிகளால் எத்தனையோ உயிர்கள் பிழைத்திருக்கும் நிலையில், பிறந்த சில மணித்துளிகளே ஆன பச்சிளம் குழந்தையின் உயிர் மருத்துவரின் போராட்டத்தால் மீட்கப்பட்டது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு பலரும் பாராட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here