உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை) – பாகம் 4

0

                                                                         Story Writer

                                                                                   Sudha Rajendiran

ராஜி கோவிலுக்கு கிளம்புவதாக வெற்றியிடம் சொல்லி விட்டு செல்ல அவனும் அறக்க பறக்க கிளம்புகிறான்.

இந்த சம்பவம் தான் அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்று அவர்களுக்கே தெரியவில்லை.

ராஜியின் வீட்டில் இருந்து கோவிலுக்கு கிளம்புகிறாள். வீட்டில் உள்ளவர்கள் கடைசி நேரத்தில் வர முடியாமல் போக ராஜி மட்டும் செல்கிறாள்..,

நீல நிற சேலையில் அழகே வடிவான அவளை பார்க்க இரண்டு கண் போதாது.., அவளின் அந்த நீண்ட கண்ணிற்கு மேலும் அழகை சேர்க்க அவள் தீட்டி இருந்த மை, இளஞ்சிவப்பு இதழுக்கு மெருகேற்றும் விதமாக லிப்ஸ் டிக் வேறு.., மொத்தத்தில் பெண்ணவள் தேவதையாய் மிளிரினாள்.

ராஜி கோவிலுக்கு வந்து சேர அவள் சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள்..,

அந்த சமயம் வெற்றியும் கோவிலுக்கு வந்து ராஜியை தேட சட்டென்று கண்ணில் பட்டாள்..,

நம்ம ராஜியா இது?? இதுவரை ஒரு தடவை கூட வெற்றி அவளை சேலையில் பார்த்தது இல்லை.., அப்படியே மெய் மறந்து விட்டான்..,

அவளது செய்கை, தோற்றம் அனைத்துமே வெற்றியை மெய் மறக்க செய்தது.., மொத்தத்துல பையன் டோடல் ஆஃப்.., அவளது அழகு இவனை என்னவோ செய்தது.., ராஜி பிரகாரத்தை சுற்றி வர வெற்றியை பார்த்து விடுகிறாள்..,

வெற்றியை பார்தத்த்தும் ராஜிக்கு செம ஷாக்..,

கோவிலுக்கு வந்ததில் இருந்து ராஜிக்கு வெற்றியின் நினைப்பு தான்.., பெண் மகளின் வேண்டுதலும் அதுவே..,

ஹாய்.., நீ என்ன இங்க..,

அது வந்து.., ஒரு Friend அ பார்க்க வந்தேன்.., எதேர்ச்சியா உன்னையும் பார்த்தேன் அதான் உள்ள வந்தேன்..,

ஓஹோ.., சரி டைம் ஆச்சு கிளம்பலாமா?? உனக்கு ஏதும் வேலை இல்லனா சொல்லு நான் உன்ன ட்ராப் பண்ணிடுறேன்..,

வெற்றிக்கு உள்ளே ஒரே கொண்டாட்டம் தான்..,

அவனது தலை தானாகவே அசைந்தது..,

ராஜி பின்னால் வெற்றி ஏறி உட்கார.., அவளது வாசனையோடு செண்டு ஸ்மெல்லும் சேர்ந்து வர மயங்கி தான் போனான்.., ராஜிக்கும் அதே நிலை தான்.., இத்தனை நாள் திவ்யா-வெற்றி-ராஜி என மூவரும் இணைந்து தான் இருந்தனர். அப்பொழுது பெரிதாக தெரியாத இந்த உணர்வை இன்று எதோ இந்த தனிமை கொடுத்திருந்தது..,

ஸ்கூட்டி ஸ்மூத்தாக போய்க்கொண்டிருக்க திடீரென ஒரு சடன் பிரேக் போட வெற்றி சற்று தடுமாறி ராஜியின் இடுப்பில் கை வைக்க.., அவளும் கூச்சத்தில் தடுமாறி வண்டியை விட்டு விட்டாள்..,

ராஜி முதலில் விழ அவளுக்கு மேல் வெற்றி விழ.., அங்கு ஒரு காதல் காவியமே நடந்து கொண்டிருந்தது..,

‘உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா??

இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா??’

எப்படியோ கஷ்டப்பட்டு இருவரும் எழ மனமில்லாமல், எழுந்து விட்டனர்..,

அடி ஏதும் பட்ருச்சா வெற்றி..,

அப்டிலாம் எதுவும் இல்ல..,

வெற்றியால் ராஜியை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை..,

நம்ம ராஜிக்கும் அதே நிலைமை தான்..,

வண்டி கொஞ்சம் டேமேஜ் ஆக ஒர்க் ஷாப்பில் விட்டுவிட்டு செல்கின்றனர்..,

இருவரும் நடந்து வர அப்பொழுது வண்டி எதிரே கிராஸ் ஆக வெற்றி ராஜி மேல் படாமல் இருக்க அவளது shoulderஇல் கைவைத்து இழுக்க பெண்ணவளுக்கு சகலமும் ஆடிப்போனது..,

டேய் வெற்றி.., கொஞ்சம் ஓவரா தான் போற.., அவ என்ன நெனச்சுட்டு இருக்கானே தெரியலையே.., மனசுக்குள் புலம்பி கொண்டிருந்தான் வெற்றி..,

திடீரென கன்னத்தில் சில்லென எதோ படர ஸ்தம்பித்து போனான் வெற்றி..,

ராஜி அவனது கன்னத்தில் சட்டென்று முத்த மிட்டு ஓட

வெற்றி அவளை லாவகமாக பிடித்து இழுத்து விட்டான்..,

இதை எதிர்பார்க்கத்தவள் அவனது மார்பில் வந்து விழ அவளது கன்னங்கள் சிவக்க..,

அவளது நாடியை பிடித்து நிமிர்த்தினான்.., வெற்றி

அவளது கண்களே அவன் மேல் இருக்கும் காதலை சொல்லியது..,

அவனது கவனம் இதழை நோக்க..,

கை அவளது கன்னத்தை வருடி கொண்டிருந்தது..,

இதற்கு மேல் தாங்காது என சுதாரித்த ராஜி சட்டென்று அவனை தள்ளி விட்டு ஓடி விட்டாள்..,

நடந்தது கனவா?? நனவா?? என்று புரியவே வெற்றிக்கு சில நிமிடங்கள் எடுத்தது..,

ராஜிக்கு இத்தனை நாள் வெற்றி தனது காதலை ஏற்பானா?? இல்லையா?? என்று தவித்து கொண்டிருந்தவளுக்கு இந்த சம்பவம் குளிர தான் செய்தது..,

இருவருமே தனி அறையில் அவர்களது போட்டோவை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்..,

இருவருமே மெசேஜ் செய்யலாமா?? வேண்டமா?? என்ற தயக்கத்துடனேயே பொழுதை கழித்தனர்..,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here