தீவிரமடைந்து  காசா மீதான தாக்குதல்., பரிதவிக்கும் குழந்தைகள்.,  அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஐ நா!!  

0
தீவிரமடைந்து  காசா மீதான தாக்குதல்., பரிதவிக்கும் குழந்தைகள்.,  அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஐ நா!!  
கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி வருவதால்  ஏராளமான மக்கள் நித்தம் நித்தம்  மரணித்து வருகின்றனர். இந்த போரில் மருத்துவமனைகளும் சேதமடைந்ததால் முதலுதவி பெறுவதற்கு கூட வழியின்றி காசா மக்கள் தவித்து வருகின்றனர்.
இதோடு அத்தியாவசியமான உணவு மற்றும் நீர் உள்ளிட்டவற்றை மக்களுக்கு போதுமான அளவு வழங்க இஸ்ரேல் ராணுவம் தடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஐ நா சபை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது காசாவில் நடந்த தாக்குதலில் இதுவரை தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை இழந்து கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தொடர் போரின் காரணமாக குண்டு வெடிப்பு சத்தங்கள் குழந்தைகளில் உளவியல் மற்றும் மனநல ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here