தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு.., போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு.., போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழக அரசு பேருந்துகளில் மக்களின் நலனுக்காக போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க சமீபத்தில் மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும். மேலும் பயணிகளுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 200 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர கதவுகளுக்கு அருகில் உள்ள ஜன்னல்களிலும் நிரந்தரமாக கண்ணாடிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here