இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்…, சாதனைகளை அள்ளி குவித்து அசத்தல்!! 

0

சர்வதேச இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 0-1 என இந்திய அணி பின்தங்கிய நிலையில் 2வது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் குவித்து அசத்தி உள்ளது. இதில், இந்திய அணியின் இளம் (22 வயது) வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு.., போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அதாவது,

  • முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர்களில் ஒருவர் கூட 35 ரன்கள் கடக்காத நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் அடித்து விளையாடி 19 பவுண்டரி 7 சிக்ஸர் உட்பட 209 ரன்கள் விளாசி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் திகழ்ந்துள்ளார்.
  • விராட் கோலி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வாலுக்கு அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டை சதம் விளாசிய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
  • ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இரானி கோப்பை, டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வடிவ டெஸ்ட் தொடரிலும் இரட்டை விளாசிய அசத்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடைந்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here