IND VS SL 1 ODI : கிரிக்கெட் வரலாற்றில் வேகத்தில் சாதனை செய்த உம்ரான் மாலிக்!!!

0
IND VS SL 1 ODI : கிரிக்கெட் வரலாற்றில் வேகத்தில் சாதனை செய்த உம்ரான் மாலிக்!!!
IND VS SL 1 ODI : கிரிக்கெட் வரலாற்றில் வேகத்தில் சாதனை செய்த உம்ரான் மாலிக்!!!

இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் வேகப்புயல் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் புதிய உச்சத்தை அடைந்துள்ளார்.

உம்ரான் மாலிக்:

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்களை குவித்திருந்தது. இதில், விராட் கோலி (113), ரோஹித் சர்மா (83), சுப்மன் கில் (70) அதிரடியாக விளையாடினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய பவுலர்களிடம் பறிகொடுக்க, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில், இந்திய அணியின் அதிவேக பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி: இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி அறிவிப்பு!!

இவர், இந்த போட்டியின் 14 வது ஓவரில், முதல் மூன்று பந்துகளை 147, 151 மற்றும் 151 கிமீ வேகத்தில் வீசிய உம்ரான் மாலிக், 4 வது பந்தை 156 கி மீ வேகத்தில் வீசி அசத்தி உள்ளார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச அளவில், உம்ரான் மாலிக்கின் அதிவேக பந்து வீச்சாக இது அமைந்தது. இவர் இதற்கு முன், ஐபிஎல் தொடரில், 157 கி மீ வேகத்தில் பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில், பாகிஸ்தானின் சுஐப் அக்தர், இங்கிலாந்து அணிக்கு எதிராக 161.3 கி மீ வேகத்தில் வீசி முதலிடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here