ஹெலிகாப்டர் வெடித்து இறந்த உள்துறை அமைச்சர்., 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் பலி! உக்ரைனில் சோகம்!!

0
ஹெலிகாப்டர் வெடித்து இறந்த உள்துறை அமைச்சர்.,2 சிறுவர்கள் உட்பட 16 பேர் பலி! உக்ரைனில் சோகம்!!
ஹெலிகாப்டர் வெடித்து இறந்த உள்துறை அமைச்சர்.,2 சிறுவர்கள் உட்பட 16 பேர் பலி! உக்ரைனில் சோகம்!!

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில், நாட்டின் உள்துறை அமைச்சர் டென்னிஸ் சென்ற ஹெலிகாப்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், அவருடன் சேர்த்து 16 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உள்துறை அமைச்சர் மறைவு:

கடந்த சில மாதங்களாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் முடிவில்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷ்யாவின் அதிபர் புதின், உக்ரைன் நகரின் பகுதிகளை கைப்பற்ற தொடர்ந்து, அந்நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உக்ரைன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை, ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ள நிலையில் இன்னும் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த நாட்டின் உள்துறை அமைச்சர் டென்னிஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனா எதிரொலி.., இனி முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் கட்டாயம்.., மாநில அரசு அறிவிப்பு!!!

அந்த ஹெலிகாப்டர், ஒரு தொடக்கப்பள்ளி அருகே விழுந்ததில் அங்கிருந்த 2 சிறுவர்கள் உட்பட 16 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலான்ஸ்கி தமது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here