வேற வேற தடுப்பூசி போட்டா என்ன ஆகும்?? – பிரிட்டன் நடத்திய ஆய்வில் வந்த தகவல்!!!

0

இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தும்போதும் வேறு வேறு கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி நம் அனைவருக்கும் இருந்தது. தற்போது இதை பற்றி ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி குழு ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. அந்த ஆய்வின் முடிவின் வெளியிடப்பட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு இருக்க சில நாடுகள் முதல் டோஸ் செலுத்தும்போது பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி மருந்தையே இரண்டாம் டோஸிலும் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. அதாவது இந்தியாவை பொறுத்தவரை முதல் டோஸில் நீங்கள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இரண்டாம் டோஸ் செலுத்தும்போதும் கோவிஷீல்டு தடுப்பூசியையே நீங்கள் செலுத்திக்கொள்ளவேண்டும்.

இந்நிலையில், பிரிட்டன்னில் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி குழு நடத்திய ஆய்வில், இரண்டு டோஸ்கள் பைஸர் அல்லது இரண்டு டோஸ்கள் அஸ்ட்ராஜெனகா எடுத்துக் கொண்டவர்கள் வேறு கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராகச் சிறப்பாக செயலாற்றுவதாகவும்,அதிகளவு நோய் எதிர்ப்பினை சக்தியை உருவாக்குவதாகவும் அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரந்தீப் குலேரியா தெரிவித்ததாவது “இந்தியாவில் இது போன்ற வேறு வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது நன்மை பயக்கும் என்று ஒரு ஆய்வின் முடிவில் உறுதிப்படுத்த முடியாது.  இதை உறுதிப்படுத்த ஒன்றிரண்டு ஆய்வு முடிவுகள் மற்றும் நிறைய தகவல்கள் வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here