மத்திய பிரதேச நதியில் இரண்டு உடல்கள் கண்டுபிடிப்பு – கோவிட் 2ம் அலை எதிரொலி !!!

0

மத்திய பிரதேச நதியில் இரண்டு உடல்கள் கண்டுபிடிப்பு – கோவிட் 2ம் அலை எதிரொலி !!!

கோவிட்டின் இரண்டாவது அலை அதிகரிப்பதால் இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு மத்தியில் மத்திய பிரதேச நதியில் இரண்டு இறந்தவர்களின் சடலம் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் தொற்றால் இறந்தப்பவர்களின் என்ணிக்கை அதிகரிப்பால் தற்போது நாட்டில் பல மனிதநேயமற்ற செயல்கள் நடந்து வருகிறது. இதே போல் இறுதி சடங்கு செய்யப்படுவதற்கு பதிலாக இறந்தவர்களின் உடல்கள் ஆறுகளில் கொட்டப்படுகின்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் ரன்ஜ் ஆற்றின் கரையில் செவ்வாய்க்கிழமை இரண்டு சடலங்கள் காணப்பட்டன. இதை தொடர்ந்து அப்பகுதியின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர், சடலங்கள் உள்ளூர்வாசிகள் உடையது என்றும், அவர்களில் ஒருவர் புற்றுநோயால் இறந்தவர் , மற்றொருவர் வயதானவர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் கிராமத்தில் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாக செயல்படும் ரன்ஜ் ஆற்றில் நான்கு முதல் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் கங்கா நதிக்கரையில் ஏராளமான உடல்கள் கண்டறியப்பட்ட நிலையில் கோவிட் நோயாளிகளின் உடல்கள் ஆக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தில் 71 சடலங்கள் ஆற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பக்ஸாரில் இருந்து 55 கி.மீ தூரத்தில் உத்தரபிரதேசத்தின் காசிப்பூரில் அதிகமான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here