கோவிட் தொற்றுக்கு எதிராக போராடும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு – வைரலாகும் ட்வீட்!!

0

தேசிய தொழில்நுட்ப தினமான நேற்று, (மே 11) பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றும் விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

தேசிய தொழில்நுட்ப தினம்:

1998-ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 11-ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இந்தியர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் கொண்டாடப்படுகின்றன.

 

அந்த வகையில் தேசிய தொழில்நுட்ப தினமான இன்று பிரதமர் மோடி தன் டுவிட்டர் பக்கத்தில் “தேசிய தொழில்நுட்ப நாளில் நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியை நாம் வணங்குவோம்”.

எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும் விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களும் தக்க தருணத்தில் முன்வந்து சவாலை முறியடிக்க உழைக்கின்றனர். கடந்த ஓராண்டாக கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் கடுமையாக பணியாற்றுகின்றனர். அவர்களின் முனைப்பு மற்றும் வைராக்கியத்தை நான் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

“தேசிய தொழில்நுட்ப தினத்தன்று, நம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியான தன்மைக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலிமையை நிரூபித்த 1998 போக்ரான் சோதனையை நாங்கள் பெருமையுடன் நினைவில் கொள்கிறோம்,” இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here