கொரோனா சிகிச்சை புதிய நெறிமுறைகள் – முக்கிய அம்சங்கள் வெளியீடு!!

0

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. மேலும் தற்போது கொரோனா சிகிச்சைக்கான நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

நெறிமுறைகள்:

கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பதித்து வருகிறது. இதனால் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் அளவு 95கு கீழ் இருக்கும் நோயாளிகள் கட்டாயமாக பராமரிக்கப்பட வேண்டியவர்கள் என தமிழக அரசு கூறியுள்ளது. இதன் அடிப்படையில் கோவிட் நோயாளிகள் 4 வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.


1. வீட்டுத்தனிமையில் இருப்பவர் – இவர்கள் கொரோனாக்கான அனைத்து அறிகுறி இருந்து பரிசோதனையில் நெகடிவ் வந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்துகளை எடுக்கவேண்டும்.

2.வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருப்போர் 2-ஆம் வகை. இவர்களுக்கு அனைத்து அறிகுறிகளும் இருக்கும், இருப்பினும் ஆக்ஸிஜன் அளவு 95 கு கீழ் குறைந்தால் உடனடி சிகிச்சை தேவைப்படும்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

3.கொரோனா சிகிச்சை மையங்களில் இருப்போர்: இங்கு இருப்பவர்களின் ஆக்ஸிஜன் அளவு 90-94 வரை இருக்கும் இவர்களின் ஆக்ஸிஜன் அளவு 90க்கு  குறைந்தால் அவர்கள் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.

4. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்: இங்கு இருப்பவர்களின் ஆக்ஸிஜன் அளவு 90கும் கீழ் காணப்படுபவர்கள் .இவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி வழங்கி தீவிர சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here