ட்விட்டரில் கலக்கும் விலங்குகள் …! கலகலப்பில் ட்விட்டர் தளம் !!

0

ட்விட்டர் என்பது நமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள அனைவருக்கும் உதவியாக இருக்கும் சமூக வலைத்தளம். பிரபலங்கள்  முதல் பிரபலம் ஆக போராடுபவர்கள் வரை இந்த தளத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் கூறிவருகின்றனர். அந்த வரிசையில் விலங்குகளும் இடம் பிடித்து உள்ளன. விலங்குகளின் பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கி நகைச்சுவையாக ட்வீட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

சமூக வலைத்தளங்கள் மட்டுமே தற்போது உள்ள சூழலில் இளைஞர்களின் பொழுது போக்காக வருகின்றன. தங்களின் கருத்துக்களை எளிய முறையில் மக்களிடம் வெளிப்படுத்த ட்விட்டர் தளம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அரட்டைகளுக்கும் அங்கு பஞ்சம் இல்லை. நடிகர், நடிகைகளின் புகைப்படங்களுக்கு கருத்து தெரிவிப்பது என பலவிதங்களில்  இந்த தளம் உதவுகிறது.

இந்நிலையில் விலங்குகளையும் விட்டு வைக்காத நெட்டிசன்கள் அவர்களின் பெயர்களிலும் ட்விட்டர் கணக்கை தொடங்கி நகைச்சுவைக்கு மேலும் வழிவகுத்து உள்ளனர். நிகழுலகில் விலங்குகள் பேசத்தொடங்கினால் எப்படி இருக்கும் என்ற புது சிந்தையோட இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம். தற்போது ட்விட்டரில்  #ஒன்றிய உயிரினங்கள்  என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here