அமலுக்கு வந்த CAA சட்டம்.. தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு.. முழு விவரம் உள்ளே!!

0
அமலுக்கு வந்த CAA சட்டம்.. தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு.. முழு விவரம் உள்ளே!!
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இதற்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அவர் CAA சட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருந்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறை படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள் முதல் அறிக்கையிலேயே ஆப்பு வச்சுட்டாங்களே என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here