தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது., அரசின் அதிரடி அறிக்கை!!!

0
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது., அரசின் அதிரடி அறிக்கை!!!
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது., அரசின் அதிரடி அறிக்கை!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் 2018 ஆம் ஆண்டு போராட்டம் மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடு, 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி தமிழ்நாடு அரசு சீல் வைத்தது. இந்த நிலையில் மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக 25 பக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில் “ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அடிப்படை விதிமுறைகளை கூட வேதாந்தா நிறுவனம் பின்பற்றவில்லை. எனவே ஆலை செயல்பட அனுமதிக்க கூடாது.” என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையை நாளை (ஆகஸ்ட் 22) மற்றும் நாளை மறுநாளுக்குள் (ஆகஸ்ட் 23) முடிக்க வேண்டும் என நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஒரு சொட்டு மது கூட விற்பனை ஆகல.., ஆனா .., ரூ.2,639 கோடி கல்லா கட்டிய தெலுங்கானா மாநிலம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here