சுற்றுலா பேருந்துகளுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.. இத மட்டும் செஞ்சிடாதீங்க? பொதுமக்கள் வரவேற்பு!!!

0

அகில இந்திய அளவில் சுற்றுலா பேருந்துகளை இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்துக்குள் இயக்க தனியாக வரி செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதை நாம் அறிவோம். அந்த வகையில் சமீப காலமாக விதிமீறல் நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அகில இந்திய சுற்றுலா பேருந்துகளுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், அகில இந்திய சுற்றுலா வாகன அனுமதி சீட்டைப் பெற்று, பயணிகள் பேருந்து போல கட்டணம் வசூலித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பற்றிய விவரங்கள் 1 வருடத்துக்கு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் எனவும், கேட்கப்படும் நேரத்தில் பயணிகள் விவரங்களை காண்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

T20 WC 2024: முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here