காவல் துணை ஆய்வாளர் ஆன திருநங்கை சிவன்யா – கேலி, கிண்டல்களை கடந்து பொறுப்பேற்றுள்ளார்!!!

0
காவல் துணை ஆய்வாளர் ஆன திருநங்கை சிவன்யா - கேலி, கிண்டல்களை கடந்து பொறுப்பேற்றுள்ளார்!!!
காவல் துணை ஆய்வாளர் ஆன திருநங்கை சிவன்யா - கேலி, கிண்டல்களை கடந்து பொறுப்பேற்றுள்ளார்!!!

திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை சிவன்யா சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார். கேலி, கிண்டல்களை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் எதையும் காதில் வாங்கமால் முழு கவனத்தையும் என்னுடைய கனவான காவல் அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நினைவில் கொண்டு இந்த வெற்றியை பெற்றுள்ளேன் என்றார்.

கேலி, கிண்டல்களை கடந்து எஸ் ஐ ஆனா திருநங்கை…

கடந்த 27 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையை செயலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கும் விதமாக 10 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். அந்த 10 பேரில் ஒருவராக திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கையான சிவன்யா சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுளளார். அவருக்கு முதல்வர் கையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதனை கண்டு சிவன்யா பெரும் மகிழ்ச்சி பெற்றார், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தன்னார்வலராக பணியாற்றி வந்தவர், இவர் காவலர் தேர்வுக்காக பணியாற்றிக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்குத் பயிற்சி பெற்று இப்பொழுது வெற்றி பெற்றுள்ளார்.

கேலி, கிண்டல்களை கடந்து எஸ் ஐ ஆனா திருநங்கை...
கேலி, கிண்டல்களை கடந்து எஸ் ஐ ஆனா திருநங்கை…

பின் அவர் கூறுகையில் காவல் துறை அதிகாரியாக பணி ஆற்றவேண்டும் என்பது என்னுடைய கணவு. என் கணவு நிறைவேறி வருகிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், என்னுடைய பணி நியமன ஆணையை முதல்வரிடம் இருந்து பெற்றுக்கொண்டது இன்னும் பெருமையாக உள்ளது, என்னுடைய இந்த வெற்றிக்கு முழு காரணம் மற்றும் உறுதுணையாக இருந்தது என் குடும்பத்தாருக்கும் என்னுடைய சகோதரரும் தான் அவர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் தான் எனக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றார். அதுமட்டுமில்லாமல் குரூப்-1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம் குறிக்கோள், அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வு நடத்தப்பட்ட போது என் மீது பல கேலி, கிண்டல்கள் வந்தது. அதை எதையும் நான் கண்டுக்காமல் சற்றும் காதில் வாங்காமல் என்னுடைய முழு கவனத்தையும் நான் தேர்வில் செலுத்தினேன்.

முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர் பிரித்திகா யாஷினி
முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர் பிரித்திகா யாஷினி

அதுமட்டுமில்லாமல் கொரோனா பேரிடர் காலத்தில் இருந்த ஊரடங்காள் உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு சற்று காலதாமதம் ஆனது. அது எங்கு சற்று மன வேதனையளித்தது. அதையும் நான் கண்டுகொள்ளாமல் அமைதியை இழக்காமல் பொறுமை காத்தேன் என்றார் சிவன்யா. திருநங்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக, தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர் பிரித்திகா யாஷினி முன்மாதிரியாக இருந்து வருகிறார். அதுபோல் அரசு வேலைக்குச் செல்ல விரும்பும் அனைத்து திருநங்கைகளுக்கும் நான் முன்மாதிரியாக விளங்குவேன் என்றார். பெண்கள் கல்வியறிவு பெற்றுவிட்டால் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் மதிக்கத்தக்கவர்களாகவும், ஒரு கெளரவமான வேலைக்குச் சென்றுவிட்டால் குடும்பம் மற்றும் சமூகத்தை சிறப்பாக வழிநடத்த முடியும் என்றார். சிவன்யாவின் அவரது மூத்த சகோதரர் ஸ்டாலின் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார், இளைய சகோதரர் தமிழ்நிதி காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here