குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா?? அப்போ இந்த உருளைக்கிழங்கு பான் கேக் செஞ்சு கொடுங்க!!

0

உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு ஆகும். அதில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் தற்போது உருளைக்கிழங்கை வைத்து பான் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1/4 கி

சோளமாவு – 1 தேக்கரண்டி

கடலை மாவு – 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் – 2

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகு – 1/2 தேக்கரண்டி

உப்பு – தே.அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை நன்கு கழுவி எடுத்து அதனை தோல் சீவி துருவி எடுத்துக்கொள்ளவும். அதனை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அதன் பின் அதனை பிழிந்து வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ளவும். அதில் சோளமாவு, கடலை மாவு, உப்பு, பச்சை மிளகாய், சீரகம், இடித்த மிளகு இவரை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

இதனை 10 நிமிடம் தனியாக மூடி வைத்து கொள்ளவும். இப்பொழுது அது வடை மாவு பதத்திற்கு வரும். இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து அந்த மாவை உருட்டி தோசை போல பரப்பி கொள்ளவும். இதனை திருப்பி போட்டு எடுத்தால் சுவையான உருளை கிழங்கு பான்கேக்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here