தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த மர்ம நபர் – சமூகவலைத்தளத்தில் பரபரப்பு வீடியோ!!

0

மும்பை நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில், நேற்று அடையாளம் தெரியாத நபர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த பதைபதைக்கும் வீடியோ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மர்ம நபர் :

மும்பை நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நேற்று 11:45 மணியளவில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தூரத்தில் ரயில் வருவதை பார்த்து ஓடி வந்து ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உள்ளார்.அவர் தண்டவாளத்தில் படுத்து இருப்பதை பார்த்த ரயில் ஓட்டுநர், அந்த நபருக்கு சற்று அருகில் வந்து ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்தினார். பிறகு காவல்துறை அதிகாரிகள் ஓடி வந்து, அந்த நபரை அழைத்து சென்றனர்.

அந்த நபர் தற்கொலை செய்வதற்காக அப்படி செய்தாரா? அல்லது குடிபோதையில் அப்படி செய்தாரா? என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும், சமயோஜிதமாக யோசித்து ரயிலை நிறுத்திய அந்த ஓட்டுநரை ரயில்வே அமைச்சகம் பாராட்டியுள்ளது. இதுவரை 93,000பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். அதில், 5,700 பேர் லைக்குகளை தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ மிகவும் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here