தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் முன்பதிவு தொடக்கம்!!

0
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் முன்பதிவு தொடக்கம்!!
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் முன்பதிவு தொடக்கம்!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல உள்ளவர்கள் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக உள்ளது. மேலும் முன்பதிவு குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜாக்பாட் அறிவிப்பு:

தமிழகத்தில் வருடம் தோறும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் ஆகும். இதையடுத்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பேருந்தை விட ரயில் பயணங்கள் வசதியாக இருக்கும் என்பதால் மக்களின் முதல் தேர்வாக ரயில் பயணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளவர்களுக்கு தற்போது ரயில் பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. வெளியான அறிக்கையில் வரும் ஜனவரி 10, 2023 தொடங்கி பொங்கல் விடுமுறை நாட்களுக்கான முன்பதிவை (செப்டம்பர் 12) இன்று முதல் IRCTC இணையதளத்தில் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜனவரி 11ம் தேதி பயணம் செய்வோர் நாளையும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்வே துறையின் இந்த சிறப்பான அறிவிப்பானது, ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here