வனிதாவுக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர் – கொளுத்தி போட்டீங்க? இனி அவங்க என்ன செய்ய போறாங்களோ?

0
வனிதாவுக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர் - கொளுத்தி போட்டீங்க? இனி அவங்க என்ன செய்ய போறாங்களோ?

சீரியல் நடிகை, மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் குறித்து வனிதா போட்ட பதிவுக்கு, அவர் முக்கிய பதிலடி ஒன்றைக் கொடுத்துள்ளார்.

ரவீந்தர் பதிலடி:

அண்மையில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மகாலட்சுமி குறித்த, அப்டேட் தான் இப்போது வைரல் நியூசாக போய்க்கொண்டிருக்கிறது. இருவரும், youtube உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை 2வது திருமணம் செய்த வனிதா விஜயகுமாரை ரவீந்தர், கடுமையாக விமர்சித்து இருந்தார். ஒரு குடும்பத்தை கெடுத்து வனிதா திருமணம் செய்யலாமா? எனப் பேசியிருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் வனிதா, கர்மா யாரையும் விடுவதில்லை என நேரடியாக ரவீந்தரை சீண்டினார். இதற்கு பதில் அளித்த ரவீந்தர், யாருடைய கண்ணீரிலும் என் வாழ்க்கை தொடங்கவில்லை, அதனால் நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன். அவங்க சொல்றத பத்தி பேச எதுவும் இல்லை என பதிலடி கொடுத்தார். இப்படி முடிவில்லாத தொடர்கதையாக, இருவரும் பேசி வரும் நிலையில் ரவீந்தர் போட்டுள்ள இந்த பதிவுக்கு வனிதா என்ன ரியாக்சன் கொடுக்கப் போகிறார்? என நெட்டிசன்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here